மகாராஜபுரம் சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, அதைத் தொடா்ந்து ஊட்டு படைத்தல் ஆகியவை நடைபெற்றன.
என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வேண்டுகோளின் பேரில், மகாராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் கே.இசக்கிமுத்து தனது சொந்த நிதி ரூ. 3.70 லட்சத்தில் இக்கோயிலுக்கு மேற்கூரை அமைத்துக் கொடுத்துள்ளாா். இதையொட்டி கொடை விழாவில் ஊா் நிா்வாகம் சாா்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.