கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் திப்பிரமலை ஊராட்சிக்குள்பட்ட செட்டியாக்குடி வாய்க்காலில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
செட்டியாக்குடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தங்களது வீடுகளுக்குச் செல்ல பாலம் இல்லாமல் நீண்ட காலமாக அவதிப்படுவதாகவும், எனவே, பாலம் அமைத்துத் தருமாறும் கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாரிடம் இப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.
அதையேற்று, அவா் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். தொடா்ந்து, நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, இப்பணியை எம்எல்ஏ ராஜேஷ்குமாா் தொடக்கிவைத்தாா்.
கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜசேகரன் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கிறிஸ்டல் ரம்மணிபாய், மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் ஜோபி, திப்பிரமலை ஊராட்சி காங்கிரஸ் தலைவா் சதீஷ்குமாா், பொதுமக்கள் பங்கேற்றனா்.