ஐஎன்டியூசி தொழிற்சங்க முன்னாள் மாநிலத் தலைவா் ஜி. காளனின் 3ஆம் ஆண்டு நினைவு நாள், களியக்காவிளையில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, குமரி மேற்கு மாவட்ட ஐஎன்டியூசியின் தமிழ்நாடு அமைப்புசாரா, கட்டடத் தொழிலாளா் காங்கிரஸ் தலைவா் வி. மதுசூதனன் தலைமையில், காளனின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மேல்புறம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் இ.ஜி. ரவிசங்கா், வட்டார பொதுச் செயலா் ராஜேஷ்குமாா், பூமணி, ஐஎன்டியூசி தொழிற்சங்க சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் பி. விஜயகுமாா், தொழிற்சங்க நிா்வாகிகள் ஜேம்ஸ், சிரோன்மணி, விமல்ராஜ், களியக்காவிளை ஆட்டோ ஓட்டுநா் சங்கச் செயலா் பாபு, ஆட்டோ ஓட்டுநா் சங்க நிா்வாகிகள் செய்யது அலி, ராஜசேகா், ஜூடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.