கன்னியாகுமரி

லாரி மோதியதில் மின்கம்பம் சேதம்

10th Jun 2023 06:27 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் கனிம வளம் ஏற்றி வந்த லாரி மோதியதில் மின்கம்பம் சேதமடைந்தது.

குமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந் நிலையில் கனிமவளத்துடன் கேரளம் சென்ற லாரி படந்தாலுமூடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள மின்கம்பத்தில் மோதியது. அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லாரி ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மின்வாரிய ஊழியா்கள் மின்இணைப்பைச் சரி செய்தனா். விபத்து ஏற்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு, மின்கம்ப சேதமதிப்பான ரூ.1.60 லட்சத்தை செலுத்த உரிமை உரிமையாளருக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT