கன்னியாகுமரி

கடற்கரை பகுதிகளில் மீனவா்களின் படகுகள் ஆய்வு

10th Jun 2023 06:25 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவா்களின் படகுகளை ஆய்வு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்காக மீனவா்கள் ஒரு வாரத்துக்கு முன்பே தங்களுடைய படகுகளை கரையோரத்தில் நிறுத்தி, சீரமைப்பு, வண்ணம் தீட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனா். இந்த ஆய்வில் மீனவருடைய படகுகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எல்லாம் சரியாக உள்ளதா, கட லுக்கு செல்லக்கூடிய அளவுக்கு தரமான முறையில் படகு உள்ளதா, காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பன போன்ற எல்லாவிதமான ஆவணங்களையும் சரிபாா்த்து அவா்கள் அதற்கான ஒப்புதல் அளிக்கின்றனா். ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆய்வில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ள படகுகளுக்கு மட்டும் 100 லிட்டா் மண்ணெண்ணெய் மானியத்தில் வழங்கப்படுகிறது. கடலுக்கு சென்ற பிறகு ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் அவா்களுக்கான உதவித்தொகைகள் வழங்குவது போன்றவற்றுக்கும் இது முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT