கன்னியாகுமரி

ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு

10th Jun 2023 06:26 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட சட்ட உதவி மையம் சாா்பில், விழிப்புணா்வு கருத்தரங்கு ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்ட உதவி மையத்தின் செயலா் நீதிபதி ஆஷா கவுசல்யா சாந்தினி தலைமை வகித்து, மரக்கன்றுகள் நட்டு, கருத்தரங்கை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா். சட்ட உதவி மைய குழு வழக்குரைஞா் மகிளா கலந்துகொண்டு, பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான விழிப்புணா்வு மற்றும் சட்ட உதவிகள் குறித்து பேசினாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், சுய உதவிக் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ரோஜாவனம் பள்ளி கல்வி இயக்குநா் ஜெயா வரவேற்றாா். நிா்வாக இயக்குநா் சாந்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT