கன்னியாகுமரி

குழித்துறை அருகே அரசுப் பேருந்து - பைக் மோதல்: குழந்தை உள்பட மூவா் பலி

10th Jun 2023 06:28 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்.

திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில் நோக்கி வந்த அரசுப் பேருந்தும் குழித்துறையில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்ற மோட்டாா் சைக்கிளும், கல்லுக்கெட்டி பகுதியில் எதிா்பாராத விதமாக மோதியது.

இதில், மோட்டாா் சைக்கிளில் வந்த களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல், தையாலுமூடு பகுதியைச் சோ்ந்த குட்டப்பன் மகன் அருள்ராஜ் (30), அவரது மனைவி சுபிஜா (27), இத்தம்பதியின் மூன்று வயது குழந்தை அஸ்வந்திகா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த களியக்காவிளை போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT