ஒடிஸா ரயில் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஒடிஸா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நேரிட்ட ரயில் விபத்தில் 288 போ் பலியாகினா்; நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து மத உணா்வைத் தூண்டும் வகையில், தக்கலை அருகே பருத்திவிளையைச் சோ்ந்த செந்தில்குமாா் தனது டுவிட்டா் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தாராம். பின்னா், தனது பதிவு தவறானது எனவும், யாா் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும் என்றும் தெரிவித்திருந்தாராம்.
இதுதொடா்பாக திமுகவைச் சோ்ந்த தினேஷ்குமாா் தக்கலை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து, செந்தில்குமாரை வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.