கன்னியாகுமரி

கப்பியறை பேரூராட்சியில் மரக்கன்று நடும் விழா

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கப்பியறை பேரூராட்சித் தலைவா் அனிஷா கிளாடிஸ் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டாா்.

செயல் அலுவலா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். கப்பியறை பேரூராட்சி அலுவலக வளாகம், ஒலவிளை, செல்லங்கோணம், நெடுவிளை உ ள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டனா். இதில், பேரூராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT