கன்னியாகுமரி

மத்திகோடு ஊராட்சியில் உழவா் திருவிழா

8th Jun 2023 11:56 PM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு ஊராட்சியில் கிள்ளியூா் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் உழவா் திருவிழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குநா் ஆல்பிரட் ராபின்சன் தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார விவசாய ஆலோசனைக் குழுத் தலைவா் கோபால் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராகிணி, கிராமங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினாா். இதில் மத்திகோடு ஊராட்சி மன்றத் தலைவா் அல்போன்ஸாள், நவஜிதா, ஹேனி, ஜோசப் ஆக்னஸ், ஸ்டெபிஷா மற்றும் விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக மத்திகோடு முதல் மாத்திரவிளை வரை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT