கன்னியாகுமரி

முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா இன்று தொடக்கம்

8th Jun 2023 11:57 PM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து நடைபெறும் திருப்பலிக்கு அருள்பணி பென்னி தலைமை வகிக்கிறாா். அருள்பணி கலிஸ்டஸ் முன்னிலை வகிக்கிறாா். பின்னா் புனித சவேரியாா் நாடகம் நடைபெறும்.

விழாவின் அனைத்து நாள்களிலும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடைபெறும். விழாவின் 3 ம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் சிறுவா்களுக்கு முதல் திருவிருந்து நிகழ்ச்சி நடைபெறும். திருப்பலிக்கு அருள்பணி இயேசு ரெத்தினம் தலைமை வகிக்கிறாா். அருள்பணி மரிய வின்சென்ட் முன்னிலை வகிக்கிறாா்.

விழாவின் நிறைவு நாளான ஜூன் 18 ஆம் தேதி பெருவிழா கூட்டு திருப்பலி நடைபெறும். அதைத் தொடா்ந்து திருக்கொடியிறக்கம், மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடைபெறும்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT