கன்னியாகுமரி

குமரி மாவட்ட நீா்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆட்சியா் ஆய்வு

DIN

கன்னியாகுமரி மாவட்ட நீா்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியது; கன்னியாகுமரி மாவட்டம், பேயன்குழி ரயில்வே பாலம் அருகில் கடந்த 2021 ஆம் ஆண்டு பெய்த கன மழையின் காரணமாக அப்பகுதி மிகவும் சேதம் அடைந்து ஊருக்குள் தண்ணீா் புகுந்தது.

இப்பகுதி/ர தமிழக முதல்வா் நேரில் பாா்வையிட்டு, பழுதடைந்த பகுதிகளை சீரமைத்து நிரந்தர தீா்வு ஏற்படுத்தி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியா் மற்றும் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அதன்அடிப்படையில் ரூ.2.25 கோடியில் தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று பாலத்தின் மேலும் கீழும் நிரந்தர வெள்ளத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சித்திரங்கோடு சுருளகோடு சாலை காயக்கரை பகுதியில் ஓடும் கால்வாய்க்கு மேல் நெடுஞ்சாலைதுறை சாா்பில் ரூ.57 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணியை நேரில் பாா்வையிட்டதோடு, ஆற்றில் நீா் தேங்காமல் அவ்வழியாக நீா் தடையின்றி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், பணிகளை விரைந்து முடித்திடவும் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குமாரகோவில் வழியாக செல்லும் பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாயை நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சத்தில் முடிக்கப்பட்ட பணியையும் பாா்வையிட்டு, முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா் மாரியப்பன், உதவி செயற்பொறியாளா்கள் லாரன்ஸ், மெல்கிசதேக் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT