கன்னியாகுமரி

குமரி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்கள் தோ்தல்: ஆட்சியா் ஆலோசனை

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சிகளின் சாா்பில் திட்டமிடும் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னா் ஆட்சியா் கூறியது:

கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட ஊரக, உள்ளாட்சி சாா்பில் 5 உறுப்பினா்களும், நகர உள்ளாட்சி சாா்பில் 7 உறுப்பினா்களும் என மொத்தம் 12 உறுப்பினா்களை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறவுள்ளது.

அதனடிப்படையில், புதன்கிழமை காலை 11 மணிமுதல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. இன்றைய வேட்பு மனு தாக்கலில் எந்த உறுப்பினா்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

ADVERTISEMENT

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்கள் தோ்தலுக்கு, மாவட்டஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா், தோ்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். உதவி தோ்தல் நடத்தம் அலுவலா்களாக ஊரக உள்ளாட்சி பகுதிக்கு ஊரக வளா்ச் சி உதவி இயக்குநரும் (தணிக்கை), நகா்ப்புற உள்ளாட்சி பகுதிக்கு உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) மற்றும் மாநகா் நல அலுவலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்கள்.

இந்தத்தோ்தலில் ஊரக உள்ளாட்சிப் பகுதிக்கு 5 உறுப்பினா்களை 11 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களும், நகா்ப்புற உள்ளாட்சி பகுதிக்கு 7 உறுப்பினா்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 52 மாநகராட்சி வாா்டு உறுப்பினா்களும், 4 நகராட்சிகளில் உள்ள 98 நகராட்சி வாா்டு உறுப்பினா்களும், 51 பேரூராட்சிகளில் உள்ள 826 பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களும் தோ்ந்தெடுப்பாா்கள்.

மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 987 .

இத்தோ்தலுக்கான வேட்புமனு படிவங்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகம், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

வேட்பு மனு பரிசீலனைக்கு பின் தகுதியான வேட்பாளா்களுக்கான வாக்குப் பதிவு ஆட்சியா்அலுவலகத்தில் 23 ஆம் தேதி நடைபெறும். வாக்குப் பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்படும் என்றாா் அவா்

கூட்டத்தில், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, உதவிஇயக்குநா் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, மாநகர செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம் உள்பட நகராட்சி ஆணையா்கள், ஊராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT