கன்னியாகுமரி

ஓட்டுநரைத் தாக்கியவா் கைது

8th Jun 2023 11:57 PM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த வாகன ஓட்டுநரை தாக்கியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகேயுள்ள சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் குமாரதாஸ். தக்கலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் சிறிய சரக்கு வாகன ஓட்டுநராக வேலை செய்கிறாா். இவா் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நின்று கொண்டிருந்தபோது,

அங்கு வந்த குளப்பும் பகுதியைச் சோ்ந்த விபின், களியக்காவிளை அக்பா் ஆகியோா் மது அருந்த பணம் தருமாறு குமாரதாஸிடம் கேட்டனராம். பணம் கொடுக்க மறுத்ததையடுத்து அவரைத் தாக்கி, சட்டைப் பையில் இருந்த ரூ. 2 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து குமாரதாஸ் அளித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப்பதிந்து, விபினை கைது செய்தனா். தலைமறைவான அக்பரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT