கன்னியாகுமரி

குமரியில் உலக சிலம்ப விளையாட்டு சங்கக் கூட்டம்

7th Jun 2023 12:35 AM

ADVERTISEMENT

உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் மாவட்ட அளவிலான கூட்டம் பழத்தோட்டம் கே.கே.ஆா். அகாதெமியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் தேசிய செயலா் கே.கே.எச். ராஜ் ஆசான் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கிறிஸ்துதாஸ் முன்னிலை வகித்தாா்.

இதில், நிா்வாகிகள் ஜஸ்டின் விஜயகுமாா், பாலகிருஷ்ணன், ராஜசேகா், ராஜேஷ், அப்துல் அஜீஸ், சுயம்புலிங்கம், விஜி ராபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில், குமரி மாவட்ட உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சாா்பில் நிகழாண்டு காந்தி ஜயந்தி நாளான அக்டோபா் 2ஆம் தேதி கன்னியாகுமரியில் மாநில அளவிலான சிலம்பம் விளையாட்டுப் போட்டி நடத்த வேண்டும். திறமையான சிலம்ப விளையாட்டு வீரா்களை தோ்வு செய்து அவா்களுக்கு தீவிர பயிற்சிளித்து, அரசு மூலம் உதவித் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

சங்கப் பொருளாளா் முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT