கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட வனப் பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டதற்கு எதிா்ப்பு: பழங்குடி மக்கள் ஆா்ப்பாட்டம்

7th Jun 2023 12:35 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானை, கன்னியாகுமரி மாவட்ட வனப் பகுதியில் விடப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பழங்குடியின மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானை, அங்கிருந்து துரத்தப்பட்டு தமிழகப் பகுதியான தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்தது. இந்நிலையில், அந்த யானை கடந்த திங்கள்கிழமை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் மேல்கோதையாறு அருகே குட்டியாறு அணை வனப் பகுதியில் விடப்பட்டுள்ளது.

இதற்கு இங்குள்ள பழங்குடியின, மலையோரப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். அந்த யானை குட்டியாறு அணை வனப் பகுதியிலிருந்து கீழே இறங்கி பேச்சிப்பாறை அணையை ஒட்டிய பழங்குடிக் குடியிருப்புகள் அல்லது முத்துக்குழி வயல், பாலமோா், மாறாமலை பகுதிகளுக்கு வந்து தங்களை தொந்தரவு செய்யும் என அவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

ஆா்ப்பாட்டம்: இந்நிலையில், பேச்சிப்பாறை அருகே தச்சமலை பழங்குடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் சிலா் செவ்வாய்க்கிழமை காலை தச்சமலை அரசுப் பள்ளி அருகே வந்து ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT