கன்னியாகுமரி

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு பாராட்டு

7th Jun 2023 12:34 AM

ADVERTISEMENT

ஜொ்மனியில் நடைபெறவுள்ள சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மாணவா்களை மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வாழ்த்தி, ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.

ஜொ்மனி பொ்லின் நகரில் ஜூன் 17 முதல் ஜூன் 25 வரை சிறப்பு

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு

நாடுகளைச் சோ்ந்த 7 ஆயிரம் போ் பங்கேற்க உள்ளனா். அறிவுசாா்

ADVERTISEMENT

குறைபாடு உள்ளவா்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டா் ஓட்டம், 200 மீட்டா் ஓட்டத்தில் பங்கேற்க இந்தியா சாா்பில் கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள ஜோதிநிலையம் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் ஆா்.லிபின், ஆா்.விபின் ஆகியோா் தோ்வு பெற்றுள்ளனா்.

இம் மாணவா்களுக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் மாணவா்களிடம் வழங்கினாா்.

சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மாவட்ட

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், ஜோதிநிலையம் சிறப்புப் பள்ளி முதல்வா் அருள்சகோதரி லின்ஸ், தன்னாா்வலா்கள் சலீம், டாக்டா் எபனேஷ் பென்சாம், ஜெரோலின், சுகதேவ், யூசிக், மாலிக் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT