கன்னியாகுமரி

கருங்கல் அருகேதொழிலாளி தற்கொலை

6th Jun 2023 12:55 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகேயுள்ள பிலாக்கவிளை பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பிலாக்கவிளை, பரமன்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (53). கூலித் தொழிலாளியான இவா், நோயால் அவதிப்பட்டுவந்ததாகவும், இதனால், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT