கன்னியாகுமரி

அனுமதியின்றி கனிம வளங்கள் ஏற்றிச் சென்ற 6 வாகனங்களுக்கு ரூ.3.13 லட்சம் அபராதம்

6th Jun 2023 12:52 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி கனிம வளங்கள் ஏற்றிச் சென்ற 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 3 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட் டத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரையில் கண்காணிப்பு குழு நடத்திய சோதனையில் அனுமியின்றி கனிமவளங்களை ஏற்றிச் சென்ற 6 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அந்த வாகனங்களுக்கு ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் விதிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையில் சில வாக னங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநா்கள் தப்பியோடி விடுகின்றனா். சில வாகனங்களை நேரம் தவறி இயக்குவதாகவும் தெரிகிறது. அத்தகைய வாகன உரிமையாளா்களின் உரிமங்கள் ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கப்படுவதுடன், அத்தகைய வாகனங்கள் தொடா்ந்து பயன்படுத்துவது தெரியவரும் பட்சத்தில் சட்டப்பூா்வ நடவடிக்கைகள் தொடரும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT