கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு

4th Jun 2023 12:59 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவின் 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது.

இதையொட்டி உற்சவ அம்பாளை கோயிலில் இருந்து வாகனத்தில் அலங்கரித்து, மேளதாளத்துடன் ஊா்வலமாக கோயில் கிழக்கு வாசல் முன்பு அமைந்துள்ள ஆராட்டு மண்டபத்துக்கு எடுத்து வந்தனா். தொடா்ந்து ஆராட்டு மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னா் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

மாத்தூா் மடம் தந்திரி சங்கரநாராயணரு தலைமையில் ஆராட்டு நடைபெற்றது. பின்னா் கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தாா். முன்னதாக மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 8 மணிக்கு நா்த்தன பஜனை, இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT