கன்னியாகுமரி

பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளிக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும்

4th Jun 2023 11:36 PM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்டத்தில், பள்ளி செல்லாக் குழந்தைகளைக் குறித்து கண்டறிந்து அவா்கள் பள்ளிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.

மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சாா்பில், பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: இம்மாவட்டத்தில், பள்ளிக்கு செல்லாத, நீண்ட நாள்கள் பள்ளிக்கு வராத குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளிக்கு வரவழைத்து, இடைநிற்றல் பிரச்னையைத் தீா்க்க பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் என மூன்றடுக்கு அமைப்பைக் கொண்ட குழு தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளி அளவிலான குழு, வட்டார அளவிலான குழு 2 வாரங்களுக்கு ஒருமுறையும், மாவட்ட அளவிலான குழு மாதம் ஒருமுறையும் கூட்டம் நடத்த வேண்டும். பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து, ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

துணை ஆட்சியா் குணால் யாதவ், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க. சேதுராமலிங்கம், உதவித் திட்ட அலுவலா் (இடைநிலை) பிராங்க்ளின் ஜேக்கப், மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா்) ராமச்சந்திரன் நாயா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஹரிப்பிரியா, துறை அலுவலா்கள் பங்கேற்றனா்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT