கன்னியாகுமரி

பொட்டலப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

4th Jun 2023 12:57 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்ட கடைகளில் பொட்டலப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தொழிலாளா் உதவி ஆணையா் மணிகண்ட பிரபு கூறியது: முத்திரை இடப்படாத எடையளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத பொட்டலப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், பொட்டலமிடுபவா் மற்றும் இறக்குமதியாளா் பதிவு சான்று பெறாதது, பொருள்களில் குறிப்பிட்டுள்ள எடை மற்றும் அளவுகள் இல்லாமை ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT