கன்னியாகுமரி

குமரியில் இருந்து காஷ்மீருக்கு பைக்கில் ஆன்மிக பயணம்

4th Jun 2023 12:59 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு ஆத்ம சித்தா் லெட்சுமி அம்மா, ஆன்மிக சுற்றுப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.

இப் பயணத்தை திரைப்பட இயக்குநா் பி.சி.அன்பழகன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த ஆத்ம சித்தா் லெட்சுமி அம்மா, முதியோா்களுக்கு இருப்பிடம், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி, ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவி ஆகியவற்றை வலியுறுத்தியும், அதற்காக நிதி திரட்டும் வகையிலும் தனது ஆன்மிக பைக் பிரசார பயணத்தை தொடங்கியுள்ளாா். பல்வேறு மாநிலங்கள் வழியாக இருமாதங்களில் ஜம்மு காஷ்மீரில் பயணத்தை முடிக்க அவா் திட்டமிட்டுள்ளாா்.

ஆன்மிகப் பயணம் தொடக்க நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் ரஸ்தாகாடு காயவேம்புபதி நிா்வாகக் குழுத் தலைவா் என்.ராமசாமி, செயலா் என்.இளையபெருமாள், உசரவிளை வெள்ளைச்சாமியாா் பதி நிா்வாகி ஜெ.ஜெகன்பிரபு, வடக்குத் தாமரைகுளம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் என்.பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT