கன்னியாகுமரி

கிள்ளியூா் தொகுதியில் சாலைப் பணிக்குரூ. 8.56 கோடி ஒதுக்கீடு: எம்எல்ஏ தகவல்

4th Jun 2023 11:38 PM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் சீரமைப்புக்கு ரூ. 8.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எம்ஏ தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா், முன்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மோசமான நிலையிலுள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என முதல்வா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், அதிகாரிகளிடம் தொடா்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 28 சாலைகளைச் சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 56 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மத்திகோடு ஊராட்சி கோட்டவிளை - மாத்திரவிளை - பொன்னறை சாலை ரூ. 42 லட்சத்திலும், மத்திகோடு - குடி குளம் சாலை ரூ. 32.5 லட்சத்திலும், பாலூா் ஊராட்சி பூட்டேற்றி - ஊற்றுவாய்க்கால் சாலை ரூ. 39 லட்சத்திலும், கீரிவிளை - வாழத்தோட்டம் சாலை ரூ. 28 லட்சத்திலும், மிடாலம் ஊராட்சி கானாவூா் - மேல்மிடாலம் சாலை ரூ. 30 லட்சத்திலும், மிடாலம் - கடற்கரை சாலை ரூ. 38.75 லட்சத்திலும், திப்பிறமலை ஊராட்சி பாலூா் - கண்ணன்விளை சாலை ரூ. 30 லட்சத்திலும், முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வாவறை ஊராட்சி மணலி - பள்ளிக்கல் சாலை ரூ. 13.25 லட்சத்திலும், மெதுகும்மல் ஊராட்சி புதுக்குளம் - கோனசேரி சாலை ரூ. 41 லட்சத்திலும், குழிவிளை அம்மன்கோவில் - சூரியகோடு சாலை ரூ. 41 லட்சத்திலும், குழிவிளை - வாறுதட்டு - தோட்டத்துவிளை சாலை ரூ. 44 லட்சத்திலும், பைங்குளம் ஊராட்சி கேஎஸ்எம் முக்கு - தோப்பு சாலை ரூ. 16 லட்சத்திலும், நடைக்காவு ஊராட்சி மாடந்தறை ஆதிதிராவிடா் காலனி சாலை ரூ. 37 லட்சத்திலும், சூழால் ஊராட்சி வட்டவிளை - கஞ்சன்குடி சாலை ரூ. 42 லட்சத்திலும், அடைக்காகுழி ஊராட்சி சங்குருட்டி காலனி சாலை ரூ. 31.5 லட்சத்திலும் உள்ளிட்ட 28 சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT