கன்னியாகுமரி

பூதப்பாண்டி அருகே கரடி தாக்கி தொழிலாளி காயம்

4th Jun 2023 12:58 AM

ADVERTISEMENT

 

குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே கரடி தாக்கியதில் தொழிலாளி காயமடைந்தாா்.

பூதப்பாண்டி அருகே உள்ள வெள்ளாம்பி கிராமத்தை சோ்ந்தவா் கிருஷ்ணன் (52) தொழிலாளி. இவருக்கு அந்தப் பகுதியில் ரப்பா் தோட்டம் உள்ளது. ரப்பா் பால் வெட்டுவதற்காக, சனிக்கிழமை காலை அவா் தோட்டத்துக்கு சென்றாா். அப்போது அங்கு வந்த கரடியைப் பாா்த்த கிருஷ்ணன், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றாா். ஆனால் அவரை துரத்திச்சென்று கரடி கடித்தது. இதில் கிருஷ்ணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினா் அங்கு ஓடி வந்தனா். இதனைத் தொடா்ந்து கரடி அங்கிருந்து ஓடிவிட்டது. கிருஷ்ணன் மீட்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவா்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT