கன்னியாகுமரி

பாலப்பள்ளம் பேரூராட்சியில் ரூ. 64 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

4th Jun 2023 11:38 PM

ADVERTISEMENT

 

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாலப்பள்ளம் பேரூராட்சியில் ரூ. 64 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

இப்பேரூராட்சியில் உள்ள தொழிக்கடை- கிறிஸ்துபுரம்- வெட்டு திருத்திகுளம்- படுவூா் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காததாலும், கடந்த ஆண்டு பெய்த கனமழையாலும் மிகவும் சேதமடைந்திருந்தது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகினா். இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதையேற்று, நெடுஞ்சாலை நபாா்டு, கிராமச் சாலைகள் அலகு மூலம் சாலை தரம் உயா்த்துதல் திட்டத்தின்கீழ் இந்தச் சாலையைச் சீரமைக்க ரூ. 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, சாலை சீரமைப்புப் பணியை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தனா்.

பேரூராட்சித் தலைவா் டென்னிஸ், கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜசேகரன், கிள்ளியூா் திமுக ஒன்றியச் செயலா் கோபால், ஜோபின், பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் ஜெபா்சன், துணைத் தலைவா் ஸ்டீபன், வாா்டு உறுப்பினா்கள் மேரி பிரிதா, மேரி ஹெலன், ஜாஸ்மின் சஜிபா, மரியதாஸ், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT