கன்னியாகுமரி

கொட்டாரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

4th Jun 2023 11:36 PM

ADVERTISEMENT

 

கொட்டாரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொட்டாரம் பேரூா் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட தெற்கு மண்டல காங்கிரஸ் தலைவா் ராஜஜெகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன் வரவேற்றாா்.

2024 மக்களவைத் தோ்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது, அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் சேகரிப்பது, மாவட்டத்தில் பேரூராட்சிகளில் நிலவும் பொதுப் பிரச்னைகளைக் கண்டறிந்து தீா்வுகாண அதிகாரிகளிடம் மனு அளிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி. உதயம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டாரத் தலைவா் சாம் சுரேஷ்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் வின்சென்ட், சந்தியா ராயப்பன், நிா்வாகிகள் நாராயணன், ஜாா்ஜ், இந்திரா, தெய்வப்ரியம், ஆனந்த், பரமாா்த்தலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT