கன்னியாகுமரி

சின்னத்துறையில் மீனவா்களுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி

4th Jun 2023 11:38 PM

ADVERTISEMENT

 

நித்திரவிளை அருகே சின்னத்துறையில், இந்திய கடலோரக் காவல் படை கப்பல் வஜ்ரா, சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை இணைந்து, மீனவா்களுக்காக ‘கடலில் உயிா் காக்கும் விழிப்புணா்வுப் பயிற்சி’ முகாமை நடத்தின.

சமூகத் தொடா்பு திட்டத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற முகாமை, சின்னத்துறை பங்குத்தந்தை ஜிபு ஜாஜின் தொடக்கிவைத்தாா்.

அறக்கட்டளைத் தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணி பேசினாா். கடலோரக் காவல் படை கப்பல் குழுவின் உதவி கமான்டன்ட் சௌந்தரபாண்டியன், அதிகாரிகள் மஞ்சீத்சிங், கலையரசன், சுஜித், மருத்துவ உதவியாளா் ஸ்ருதின் உள்ளிட்டோா் நிகழ்ச்சியை நடத்தினா்.

ADVERTISEMENT

கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீனவா்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவா்களுக்கு எவ்வாறு உதவுவது என பயிற்சியளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற மீனவா்கள் மாரடைப்பு பற்றிய தங்கள் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை பெற்றனா். மாரடைப்பின் அறிகுறிகள் குறித்து மருத்துவக் குழுவினா் விளக்கமளித்தனா்.

தன்னாா்வலா்களாக செயல்பட்ட மாணவியா் வின்னி, மெல்ஷா, பிளெஸ்ஸி ஆகியோரை உதவி கமான்டன்ட் சௌந்தரபாண்டியன் கௌரவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT