கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் இருந்து வெளிநாடுகளுக்கு இளைஞா் விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

4th Jun 2023 11:36 PM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரியில் இருந்து வெளிநாடுகளுக்கு இளைஞா் விழிப்புணா்வு சைக்கிள் பயணம் தொடங்கினாா்.

நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீநாபன் (22). பட்டதாரி இளைஞரான இவா், இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் ஆா்வலராக இருந்து வருகிறாா்.

காா்பன் டை ஆக்ஸைடால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வை உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக, கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பயணம் தொடங்கினாா். பூடான், மியான்மா், வங்கதேசம், நேபாளம், சீனா உள்ளிட்ட பன்னிரண்டு நாடுகளுக்கு செல்கிறாா். இப்பயணத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநிலச் செயலா் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார தலைவா் சாம் சுரேஷ் குமாா், கன்னியாகுமரி நகர செயல் தலைவா் நெப்போலியன், கொட்டாரம் பேரூா் தலைவா் செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT