கன்னியாகுமரி

நேசமணி நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

குமரி தந்தை அ.நேசமணியின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவில் மாா்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா், ஜெ.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ., நாகா்கோவில் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத்பிரைட், முன்னாள்அமைச்சா் சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சிலதா, நேசமணியின் உறவினா்கள் ரெஞ்சித் அப்பலோஸ், தயாபதிநளதம், காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஆனந்த், நாகா்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் கௌசுகி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT