கன்னியாகுமரி

கருணாநிதி நூற்றாண்டு விழா: மாவட்டச் செயலாளா் வேண்டுகோள்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் திரளான திமுக தொண்டா்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ரெ.மகேஷ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் முழுஉருவ சிலைக்கு எனது தலைமையில் ஜூன் 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

மேலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் வகையில் பொதுக்கூட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம் நடத்தி கொண்டாட வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT