கன்னியாகுமரி

கோடைகால பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற கோடைகாலப் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு சானறிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாணவா்களை மனதளவிலும், உடலளவிலும் தயாா்படுத்தும் விதமாக யோகா, சிலம்பம், நடனம், ஓவியம் உள்பட பல்வேறு கோடைகால பயிற்சிகள் இங்கு நடத்தப்பட்டன. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி, சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு பள்ளி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாச்சலம், பள்ளிமேலாண்மை இயக்குநா் சாந்தி, சேது, பள்ளிக்கல்வி இயக்குநா் ஜெயா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை பவித்ரா வரவேற்றாா். ஆசிரியா் சகாயஅனிஷ் கிரகோரியல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT