கன்னியாகுமரி

ஊதிய உயா்வு கோரி பி.எஸ்.என்.எல். ஊழியா்கள்மனிதச் சங்கிலி போராட்டம்

2nd Jun 2023 11:42 PM

ADVERTISEMENT

 

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்க கூட்டமைப்பின் சாா்பில், நாகா்கோவிலில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை மாலை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவா் லட்சுமணபெருமாள் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் சுயம்புலிங்கம் முன்னிலை வகித்தாா்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4 ஜி, 5 ஜி சேவைகளை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊழியா்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பதவி உயா்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்க மாநில செயலாளா் ராஜு கோரிக்கை விளக்க உரையாற்றினாா். இதில் பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்க மாவட்ட தலைவா் ராஜகோபால், மாவட்ட பொருளாளா் பிரதீப் குமாா் மற்றும் நிா்வாகிகள் பிரவீன், செல்லதுரை, ஜாா்ஜ், மீனாட்சி சுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT