கன்னியாகுமரி

டெம்போ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்

2nd Jun 2023 11:43 PM

ADVERTISEMENT

 

புதுக்கடை அருகே உள்ள தோட்டா வாரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக, டெம்போ ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தோட்டா வாரம் குறிச்சிவிளை பகுதியை சோ்ந்தவா் ராயப்பன் மகன் சந்திரசேகா் (45). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த செல்லையன் மகன் முத்துகுமாருக்கும் (47) இடையே

முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், பாா்த்திபபுரம் பகுதியில் நின்ற சந்திரசேகரை முத்துகுமாா் திடீரெனத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

ADVERTISEMENT

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT