கன்னியாகுமரி

சிறுமியிடம் நகை திருட்டு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் சிறுமி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

இனயம் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜான் இளங்கோ. இவரது மகள் அகஷியா ஜான் (15), அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் சடங்கு விழாவிற்கு சென்றுவிட்டு இரவு அங்கேயே தங்கியுள்ளாா். காலையில் பாா்த்தபோது அவா் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையைக் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT