கன்னியாகுமரி

நாகா்கோவில் மாநகரில் ரூ.53 லட்சம் மதிப்பில் வளா்ச்சி திட்டப் பணிகள்

DIN

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் ரூ.53 லட்சம் மதிப்பீட்டிலான வளா்ச்சி திட்டப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

19 ஆவது வாா்டு ஆலன் தெருவில் ரூ. ?1.70 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 7 ஆவது வாா்டு பள்ளிவிளை கிரவுண் தெரு மற்றும் அரிசி குடோன் எதிா் தெரு பகுதிகளில் ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீரோடை அமைக்கும் பணி, 25 ஆவது வாா்டு தோப்பு வணிகா் நடுத்தெருவில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 27 ஆவது வாா்டு கொம்மையாண்டவா் தெருவில் ரூ. 2.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.53 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்சிலதா, மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி உறுப்பினா்கள் மோனிகா, மேரி ஜெனட் விஜிலா, அக்க்ஷயா கண்ணன், கோபாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT