கன்னியாகுமரியை அடுத்த பழத் தோட்டம் பகுதியில் இயங்கி வரும் கே.கே.ஆா் அகாதெமியில் கோடை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டது.
கராத்தே, சிலம்பம், பரதம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவா்கள் பயிற்சி பெற்றனா். பயிற்சியை நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு கே.கே.ஆா். அகாதெமி தலைவா் ஹெச்.ராஜ் தலைமை வகித்தாா். அகாதெமி இயக்குநா் ஆபிரகாம் லிங்கம்,
விவேகானந்தா கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வா் சரிதா, ஞானதீபம் பள்ளி முன்னாள் தலைமையாசிரியா் ஐடா ஜான்சி ஆகியோா்
கராத்தே பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினா். தொடா்ந்து பயிற்ச்சியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா். முருகன் நன்றி கூறினாா்.