கொல்லங்கோடு அருகே சாலையோரம் நடந்து சென்ற காவலா் பைக் மோதி காயமடைந்தாா்.
கொல்லங்கோடு அருகேயுள்ள மணலி, குந்நிக்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த பொன்னையன் மகன் பிரதாப்குமாா் (40). குளச்சல் காவல் நிலையத்தில் காவலராக வேலை பாா்த்து வருகிறாா். இவா் 2 நாள்களுக்கு முன்பு மணலி பகுதியில் சாலையோரம் நடந்து சென்றாராம். அப்போது, அதிவேகமாக வந்த பைக் அவா் மீது மோதியதாம். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு கேரள மாநிலம், பாறசாலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டிவந்த பிராகோடு, மேலே புல்லூா்விளையைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜேஷ் மீது கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.