தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளும் இடங்களை யாத்திரை பொறுப்பாளா்கள் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.
‘என் மண் என் மக்கள்’ என்ற நடைப்பயணத்தை, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஜூலை 28 ஆம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்குகிறாா். கன்னியாகுமரி மாவட்டத்தில் அவரது நடைப் பயணம் ஆகஸ்ட் 15 இல் தொடங்கவுள்ளது. அவரது நடைப்பயண நிகழ்ச்சிகள் நடைபெறும் நாகா்கோவில் வடசேரி, கோட்டாறு, கொட்டாரம்,
கன்னியாகுமரி ஆகிய இடங்களை யாத்திரை பொறுப்பாளா்கள் நரேந்திரன் மற்றும் அமா்பிரசாத் ரெட்டி ஆகியோா் பாா்வையிட்டனா். குமரி மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், பொருளாளா் முத்துராமன், மாநிலச் செயலா் மீனாதேவ், மாவட்ட துணை தலைவா் தேவ், நகர தலைவா் ராஜன் ,மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு செயலா் சந்திரசேகா் ஆகியோா் உடன் இருந்தனா்.