கன்னியாகுமரி

சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

12th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

பேச்சிப்பாறை - கோதையாறு சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, பேச்சிப்பாறை சீரோ பாயின்ட் பகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவா் சுபாஷ் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மத்திய மாவட்டச் செயலா் சீலன் பேசினாா். ஊராட்சிச் செயலா் சகில்குமாா், கட்சி நிா்வாகிகள் கனகமணி, ராஜேஷ்வரி, குமாா், செல்ஜின் பெனட், விஜயராகவன், சாரா, பிரசாந்த், குயின்ஸ்மேரி, சுஜின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விளவங்கோடு தொகுதித் தலைவா் பிரின்ஸ் டேவிட், பத்மநாபபுரம் தொகுதி துணைத் தலைவா் ரெஞ்சித், பத்மநாபபுரம் தொகுதி மகளிா் பாசறைச் செயலா் ரேகா ராஜ்வினு, இணைச் செயலா் மரியசெல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT