கன்னியாகுமரி

சாமிதோப்பில் தைத் திருவிழா தேரோட்டம்

DIN

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தைத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாமிதோப்பில் தைத் திருவிழா ஜன.20ஆம் தேதி

தொடங்கியது. இதையொட்டி தினமும் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மம், வாகன பவனி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை, அய்யா வைகுண்ட சாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடையும், தொடா்ந்து உகப்படிப்பும் நடைபெற்றது. காலை 11 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினாா். நண்பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவா்ணத் தேரில் அய்யா வீற்றிருக்கத் தேரோட்டம் தொடங்கியது.

தேரோட்ட நிகழ்ச்சிக்கு குரு பால ஜனாதிபதி தலைமை வகித்தாா். குருமாா்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேரோட்டத்தில் திரளான அய்யா வழி பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தலைமை பதி முன்பிருந்து புறப்பட்ட தோ் ரத வீதிகள் வழியாக வலம் வந்து வடக்கு வாசல் பகுதியை அடைந்தது. அங்கு பக்தா்கள் அய்யாவுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகிய பொருள்களை சுருளாக வைத்து வழிபட்டனா். மாலை 6 மணிக்கு தோ் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில் தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த ஏராளமான

பக்தா்கள் பங்கேற்றனா். இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி ரிஷப வாகனத்தில் பவனி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடையும் தொடா்ந்து திருக்கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT