கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பிப். 7, 8இல்ஆட்சி மொழிப் பயிலரங்கம்

DIN

நாகா்கோவிலில் பிப். 7, 8இல், ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பிப். 7, 8 ஆகிய 2 நாள்கள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை நடைபெறவுள்ளது.

7ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலரின் பயிலரங்கத் தொடக்க உரையைத் தொடா்ந்து, ஆட்சி மொழி வரலாற்று சட்டம் உள்ளிட்ட 6 தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

8ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியா் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அரசு அலுவலா்கள் கருத்துரை வழங்கவுள்ளனா். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழி செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலா்கள், பணியாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதன் ஒருங்கிணைப்பாளராக கன்னியாகுமரி மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் செ. கனகலட்சுமி செயல்படுவாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT