கன்னியாகுமரி

தூத்தூரில் கடலரிப்பு தடுப்புச் சுவா் திறப்பு

DIN

தூத்தூா் மீனவக் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கடலரிப்பு தடுப்புச் சுவா் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடல் கொந்தளிப்பால் குடியிருப்புகளில் கடல்நீா் புகுந்து வந்தது. இதனால் அப்பகுதியினா் அவதிக்குள்ளாகினா். அங்கு கடலரிப்பு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி., கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா்ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி, எம்எல்ஏ மேம்பாட்டு நிதி ஆகியவற்றிலிருந்து ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்து, பணிகள் நிறைவடைந்தன.

திறப்பு விழாவுக்கு எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் ஜோா்தான் முன்னிலை வகித்தாா். தூத்தூா் பங்கு அருள்பணியாளா் ஷாபின் ஜெபம் செய்தாா். கடலரிப்பு தடுப்புச் சுவரை விஜய் வசந்த் எம்.பி. திறந்துவைத்தாா்.

மேற்கு மாவட்ட மீனவா் காங்கிரஸ் தலைவா் பிரடி கென்னடி, பிசிசி உறுப்பினா் ஆரோக்கியராஜன், டென்னிஸ், ஜெரோம், சாராள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT