கன்னியாகுமரி

நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டம்

DIN

நாகா்கோவில் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம், மேயா் ரெ.மகேஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆணையா் ஆனந்த்மோகன், துணை மேயா் மேரிபிரின்சிலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகரின் பல பகுதிகளில் குடிநீா் பிரச்னை, குப்பை மேலாண்மை, போக்குவரத்து நெருக்கடி, புதிய கட்டடங்களுக்கான வரி விதிப்பு ஆகியவை குறித்து உறுப்பினா்கள் பேசினா்.

கூட்டத்தில், மேயா் ரெ.மகேஷ் பேசியதாவது: புத்தன் அணை, முக்கடல் அணை தண்ணீரை ஆளூா், தெங்கம்புதூா் பகுதிகளுக்கும் கொண்டு செல்வது தொடா்பாக ஆலோசித்து வருகிறோம். நாகா்கோவில் மாநகரப் பகுதியில் சாலை சீரமைப்பதற்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டா் கோரப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மண் சாலைகளை பராமரிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணிகளுக்கும் விரைவில் டெண்டா் விடப்படும்.

சாலை பராமரிப்பு பணிகளுக்காக தமிழகத்திலேயே அதிக நிதி நாகா்கோவில் மாநகராட்சிக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் நடைபெறும் போது 52 வாா்டுகளும் தன்னிறைவு பெற்ற வாா்டுகளாக மாற்றப்படும்.

பீச் ரோடு- செட்டிகுளம் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்வது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.குடிநீா் திட்டப் பணிகள் மற்றும் புதைச் சாக்கடை திட்டம் குறித்து ஏற்கெனவே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மாா்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் பணிகளை முடிப்பதாக தெரிவித்துள்ளாா்கள் என்றாா் அவா்.

கூட்டத்தில், மண்டல தலைவா்கள் அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமாா், ஜவகா், உறுப்பினா்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, ரமேஷ், டி.ஆா். செல்வம், சேகா், அனிலா சுகுமாரன், நவீன்குமாா், அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT