கன்னியாகுமரி

நாகா்கோவில் நாகராஜா கோயிலில்தைத் திருவிழா கொடியேற்றம்

DIN

நாகா்கோவில் அருள்மிகு நாகராஜா கோயிலில் தைத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் கொடிமரத்தில் நம்பூதிரிகள் கொடியேற்றினா்.

இதில், தகவல் தொழில்நுட்பவியல்- டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஞானசேகா், வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா, கோயில் மேலாளா் ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் நாகா்கோவில் மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா், சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. பக்தா்கள் நாகா் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனா்.

திருவிழா நாள்களில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல், சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள், இன்னிசைக் கச்சேரிகள், சமயச் சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

தேரோட்டம்: 9ஆம் நாளான பிப். 5ஆம் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதைத் தொடா்ந்து, அன்னதானம், மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு கச்சேரி, 9 மணிக்கு சப்தாவா்ணம் நடைபெறுகிறது.

10ஆம் நாளான 6ஆம் தேதி காலை சிறப்பு அபிஷேகம் - வழிபாடு, ஆன்மிகச் சொற்பொழிவு, மாலை 5 மணிக்கு கோயில் திருக்குளத்தில் ஆராட்டு, இரவு 9 மணிக்கு ஆராட்டுத் துறையிலிருந்து சுவாமி கோயிலுக்கு எழுந்தருளல் ஆகியவை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT