கன்னியாகுமரி

சாமிதோப்பில் கலிவேட்டை

DIN

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை, அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இப் பதியில் தைத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை, அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, மாலை 6 மணிக்கு அய்யா கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு குரு பாலஜனாதிபதி தலைமை வகித்தாா். குருமாா்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம், தலைமைப்பதியை சுற்றிவந்து முத்திரிக் கிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு கூடியிருந்த திரளான அய்யாவழி பக்தா்கள் முன்னிலையில் அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்ட வாகனம் சுற்றுப்பகுதி கிராமங்களான செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டையடி புதூா், சோட்டப்பணிக்கன்தேரிவிளை, காமராஜபுரம் வழியாக இரவு 9 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியை வந்தடைந்தது. இரவு 10 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யா வைகுண்டசாமியின் தவக்கோல காட்சி, அதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. 9ஆம் நாள் விழாவான சனிக்கிழமை இரவு அனுமன் வாகன பவனியும், 10ஆம் நாள் விழாவில் அய்யா இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். 11ஆம் நாள் திருவிழாவான 30ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT