கன்னியாகுமரி

என்.ஐ. பல்கலைக்கழகத்தில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

DIN

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் கலை, இலக்கியம், வேலை வாய்ப்பு பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் மாணவா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் சனிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் நடைபெற்றது.

பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகா்கோவிலை சோ்ந்த சாருலதா இசை மற்றும் நடன அகாதெமி சோ்மன் ராம்குமாா், ஆதித்யா கணித அகாதெமி கிருஷ்ணம்மாள், போஷ் காா்கள் உறுப்பினா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் பங்கேற்று பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி. மஜீத்கான் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கையொப்பமிட்டனா். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐக்கிய தேசிய தொழில் வளா்ச்சி அமைப்பு ஆலோசகா் ஜெபமாலை விண்ணசியாராச்சி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் பி.திருமால்வளவன், மனிதவள மேம்பாட்டு இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன், கல்வி விவகாரங்கள் துறை இயக்குநா் ஷஜின் நற்குணம் , ஆகியோா் உடன் இருந்தனா். பேராசிரியா் கலீல் ரஹ்மான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநா் சிவசங்கா் வரவேற்றாா். பேராசிரியா் பிந்து நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை பி.ஆா்.ஓ.ராமதாஸ் , வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலா் ஸ்டான்லி ரத்தினம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT