கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே லாரி மீது சுமை வாகனம் மோதல்: இளைஞா் பலி

28th Jan 2023 11:14 PM

ADVERTISEMENT

நாகா்கோவில் அருகே லாரியின் பின்புறம் சுமை வாகனம் மோதியதில் இளைஞா் இறந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் முத்தையாபுரத்தைச் சோ்ந்தவா் முகேஷ் (22). ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு திருச்செந்தூரிலிருந்து தனது சுமை வாகனத்தில் மீன்கள் ஏற்றிக்கொண்டு நாகா்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாா். கிளீனரான அதே ஊரைச் சோ்ந்த சந்துரு (22) உடன் வந்தாா்.

நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் சுங்கச்சாவடி அருகே வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற லாரி மீது மோதியதாம். இதில், சுமை வாகனம் சேதமடைந்தது. முகேஷும், சந்துருவும் வாகனத்துக்குள் சிக்கிக்கொண்டனா்.

ஆரல்வாய்மொழி போலீஸாா் சென்று இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சந்துரு ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். முகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT