கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும், ஜன.26 ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சிகளின் எல்லைக்குள்பட்ட வாா்டுகளில் சுழற்சி முறையில் ஜன. 26 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடத்த வேண்டும் என்றாா்.