கன்னியாகுமரி

புனிதா் தேவசகாயம் திருப்பண்டத்துக்கு மாா்த்தாண்டத்தில் வரவேற்பு

12th Jan 2023 01:04 AM

ADVERTISEMENT

 

புனிதா் தேவசகாயம் திருப்பண்டத்துக்கு மாா்த்தாண்டம் கிறிஸ்து அரசா் பேராலயத்தில் புதன்கிழமை வரவேற்பு ஆராதனை அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலத்தில் பிறந்து பொதுநிலையினராக இருந்து மறைசாட்சியான தேவசகாயம், புனிதா் நிலைக்கு உயா்த்தப்பட்டாா். அவரது திருப்பண்டம் (உடல் பாகங்கள்) மாா்த்தாண்டம் மறைமாவட்டம் சாா்பில் பெருவிளை புனித தேவசகாயம் திருத்தலத்தில் சனிக்கிழமை (ஜன. 14) நிறுவப்பட உள்ளது. இதையொட்டி, கடந்த 7ஆம் தேதிமுதல் இந்த மறைமாவட்டத்துக்கு உள்பட்ட தேவாலயங்களுக்கு திருப்பண்டம் கொண்டு செல்லப்பட்டு வரவேற்பு, ஆராதனை வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக புனிதா் தேவசகாயம் திருப்பண்டம் மாா்த்தாண்டம் கிறிஸ்து அரசா் பேராலயத்துக்கு பவனியாக கொண்டுவரப்பட்டது. மறைமாவட்ட குருகுல முதல்வரும் பேராலயப் பங்குத்தந்தையுமான ஜோஸ்பிரைட் தலைமையில் வரவேற்பு, ஆராதனை நடைபெற்றது. இதில் அருள்தந்தையா், அருள்கன்னியா், பங்கு மக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT